அசோக் செல்வன் நடித்துள்ள “சபா நாயகன்” படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு..!

Tamil Cinema News The film crew released the new song of Ashok Selvan starrer Sabha Nayagan

தமிழ் சினிமாவில் “சூது கவ்வும்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வன், அதன்பின், நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு எப்பொழுதும் தனிப்பட்ட முறையில் இருப்பதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இவர் நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

ALSO READ : நகை வாங்க சரியான நேரம் வந்துவிட்டது! ஒரே நாளில் அதிரியாக குறைந்த தங்கம் விலை..!

இதனையடுத்து, தற்பொழுது அசோக் செல்வன் நடித்துள்ள புதிய படம் “சபா நாயகன்”. இப்படத்தினை சி.எஸ். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. இந்த சூழ்நிலையில், சபா நாயகன் படத்தின் இரண்டாவது பாடலான “சீமக்காரியே” என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படால் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top