ஜெயம் ரவி, நித்யாமேனன் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு..!

Tamil Cinema News The title of Jayam Ravi and Nithya Menon new film is released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இறைவன் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி ஏற்கனவே வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஓகே கண்மணி, இருமுகன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யாமேனன் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் யோகிபாபு, வினய் ராய், லால் என்கிற எம்.பி. மைக்கில் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

ALSO READ : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை..! சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

இந்நிலையில், ஜெயம் ரவி நடித்து வரும் இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பாடக்குழு தற்போது வெளியிட்டுள்ளது மட்டுமல்லமல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஜெயம் ரவி மற்றும் நித்யாமேனன் இருவரும் கைகோர்த்து நிற்கும் காட்சி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top