தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி விவரங்கள்
Tamil Nadu Catering and Hotel Management Colleges
உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களா நீங்கள்? அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பவரா? உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தவுடன் எந்த துறையில் சென்றால் சாதிக்க முடியும் என்ற கேள்வி எல்லா மாணவர்களுக்கும் வரும். உங்கள் திறமைக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து, அதில் வெற்றி பெறுங்கள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பை தேர்வு செய்ய விரும்புகிறீர்களா? எங்கு படிப்பது? எந்த இடத்தில் கல்லூரி உள்ளது? கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள Tamil Nadu Catering and Hotel Management Colleges பற்றிய தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள நாங்கள் உதவுகிறோம்.
Tamil Nadu Catering and Hotel Management Colleges
இதுவரை சந்தோஷத்துடனும், சவால்களுடனும் உங்கள் பள்ளி படிப்பை முடித்திருப்பீர்கள். இனி வரும் காலம் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் கலகட்டமாகும். எனவே இத்தனை கருத்தில் கொண்டு நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லுரிகளை பிரிவு வாரியாக கிழே உள்ள அட்டவணையில் பட்டியலிட்டுளோம்.
குறிப்பு:
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்து மேலே கண்ட தேதியில் பல்வேறு விதமான தேடல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது ஆகும். இந்த தகவல்களில் மாற்றம் இருப்பின் எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்காது. எனவே, கொடுக்கப்பட்ட தகவல்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி என்றால் என்ன?
ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒரு நிறுவனத்தின் நிர்வாகத் திறன் பற்றிய பயிற்சியாகும். பெரிய நட்சத்திர ஹோட்டல்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற அதிக மக்கள் வந்து செல்லும் இடங்களில், எல்லாருக்கும் தேவையான உணவு, தேவையான தகவல்கள், பாதுகாப்பு, தங்கும் வசதி இவற்றை சரியாக வழங்க நிர்வாக திட்டமிடல் அவசியம். இத்தகைய நிர்வாக மேலாண்மை கல்விதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என அழைக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்பும் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைப் படிக்க கல்வித்தகுதி என்ன?
குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 3 வருட கல்லூரி படிப்பை படித்தவர்களும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக இந்தப் படிப்பிற்கு முதலில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும், குழு விவாதமும் இருக்கும்.
எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?
இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு 6 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை படிக்க வேண்டும்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தால் எந்தெந்த துறையில் பணிபுரிய முடியும்?
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் ஹோட்டல் துறையிலேயே பணிபுரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. விமான சேவைப் பிரிவுகளிலும் பணிபுரியலாம். ‘கேபின் க்ரூ’ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பொது உறவுகள் அதிகாரியாகவும் (Public Relations Officer) விண்ணப்பிக்கலாம். சுருங்கக் கூறினால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி உங்கள் வேலைவாய்ப்புக்கான சாவி!