சற்றுமுன் 9 புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..! யாருக்கு தெரியுமா?

9 New notification Published by Tamil Nadu Chief Minister M.K. Stalin Who knows

தமிழ்நாட்டில் காவல்துறையில் பெண்கள் இணைந்து சுமார் 50 ஆண்டுகளான நிலையில் மகளிர் காவலர்களுக்கான பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த மகளிர் காவலர்களுக்கான பொன்விழா நிகழ்ச்சியில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த பொன்விழாவில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை பெண் போலீசாரால் நடத்தப்பட்டது.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் காவலர்களுக்காக ‘அவள்’ என்ற திட்டத்தையும் தொடங்கிவைத்தார். மேலும், மகளிர் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்பினையும் அறிவித்தார். அவை:

1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்

2. காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை

3. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி

4. கலைஞர் காவல் கோப்பை விருது

5. காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்

6. பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்

7. பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்

8. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்

9. ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு

RECENT POSTS IN JOBSTAMIL.IN