தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முக்கிய உத்தரவு – டிரிப்பர் கருவி கட்டாயம்!

Tamil Nadu Electricity Board Tripper is Mandatory: தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின் பயனர்களுக்கு அவ்வப்போது மின் வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு தொடர்பான சில அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மின் கசிவால் ஏற்படும் சேதம் மற்றும் இறப்புகளை தடுக்க டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Electricity Regulatory Authority's Important Order Tripper is Mandatory
Tamil Nadu Electricity Regulatory Authority’s Important Order Tripper is Mandatory

அதிக வெப்பம் மற்றும் மழைக் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் பொருத்துவது கட்டாயம் ஆகும். புதிய மின் நுகர்வோர் மட்டுமின்றி தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட மின் பாதுகாப்பு முறைகள்:

பாதுகாப்பான மின் விநியோகத்தை வழங்க மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது பழுதடைந்த மின் கம்பிகள், மின் வயர்கள் போன்றவை மாற்றியமைக்க படுகிறது.

மேலும் தெரு மற்றும் சாலைகளில் உள்ள மின் பாதைக்கு இடையூறாக உள்ள உயர்ந்த மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மின் பயனர்களுக்கு அவ்வப்போது மின் வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு தொடர்பான சில அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here