தமிழக அரசு > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த மாதம் 24 ஆம் தேதியில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்க்கு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government announced for More than 1.5 Crore Applications Received for Women's Scholarship Scheme

மேலும், தமிழக அரசு தரப்பில் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகளுக்கு தகுந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது.