
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் இலவசமாகவும், மலிவான விலையிலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது தீபாவளி நெருங்கி வருவதால் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் மற்றும் ஊட்டி டீ தூளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கைரேகை பதிவின் மூலமகத்தான் வாங்கி செல்கின்றனர். ஆனால், இதில் பலருக்கும் கைரேகை பதிவு சரிவர விழாததாலும், கைரேகை பதிவு கருவி அடிக்கடி செயலிழந்து போவதாலும் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குவதில் பெரிதும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பலரும் இதுகுறித்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ALSO READ : தீபாவளி 2023 : தமிழக அரசு புதிய ஆலோசனை! தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை?
இதுபோன்ற புகார்கள் மீண்டும் வராமல் இருக்க, அரசு கருவிழி பதிவு என்ற புதிய முறையை கையாண்டு வருகிறது. இந்த கருவிழி பதிவு திட்டம் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது அமைச்சர் சக்கரபாணி இதுதொடர்பாக இரண்டு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழக ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டமானது வருகிற மார்ச் மாதத்திற்குள் 30 சதவீதம் நடைமுறைபடுத்தப்படும் என்றும் அடுத்த 9 மாதங்களில் அனைத்து ரேஷன் கடையிலும் கருவிழி பதிவு திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கான குடும்ப அட்டை அச்சிடும் பணி தற்பொழுது நடைபெற்று வருவதாவும், பொங்கல் பண்டிகைக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இதுவரை சுமார் 14 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.