
நமது தமிழக அரசு சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைத்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இந்த மின் கட்ட உயர்வை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ALSO READ : தீபாவளி பண்டிகை : மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு! ஒரு கிலோ ரூ.1,500 க்கு விற்பனை…
இந்நிலையில் சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை மின் பயன்பாட்டை பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதோடு மின் பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு பருவகால தேவைக்கு ஏற்ப மாறும் நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின் பளுவிற்கு குறைத்து கொள்ளவும் அல்லது உயர்த்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவை இல்லை. அதோடு இதை ஒரு வருடத்திற்கு 4 முறை உபயோகப்படுத்தி கொள்ளலாம். அதை தொடர்ந்து சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.