தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் திடீர் முடக்கம்..! இதுதான் கரணம்!!

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 இடங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 6 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள சுமார் 685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு முன்னதாக அறிவித்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு இன்று(ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

Tamil Nadu Government Transport Corporation website suddenly blocked This is the point read it now

அதன்படி, அரசு போக்குவரத்து கழக இணையதளம் மூலம் இன்று மாலை 1 மணியளவில் விண்ணப்பதிவு தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வந்தனர். ஆனால், விண்ணப்பப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே போக்குவரத்து கழக இணையதளம் முடங்கியது. இதனால், விண்ணப்பிக்க நினைத்த பலரும் விண்ணப்பிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

Also Read : ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்..! இணையத்தில் வைரல்!!

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இணையதளத்தை சரி செய்யும் பணி விரைந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.