தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலிப்பணியிடங்களில் 122 பணியிடங்கள் ஓட்டுனர் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 800 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் 685 பணியிடங்கள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கல்விதகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பி.சி. ஓபிசி, எஸ்.சி.எஸ்.டி. விண்ணப்பதாரர்களின் வயதானது 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 மாதங்களாவது கனரக வாகனங்களை ஒட்டியதரற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு நடைபெறும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL
- தமிழகத்திலே வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரியா நீங்க? இதோ உங்களுக்கான வேலை ரெடி? அப்ளை ஆன்லைன்..!
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!