40 ஆயிரம் சம்பளத்துல தமிழக அரசு வேலை ரெடி..! சற்றுமுன் வந்த TNIAMP-யின் வேலை அறிவிப்பு!

Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project Jobs 40 Thousand Payscale

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் (Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project) வேலை செய்ய அருமையான வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த புதிய வாய்ப்பினை பயன்படுத்தி சீக்கிரமாக அரசு வேலையில் அமருங்கள். அனைத்து வகையான தகவல்களையும் இந்த பக்கத்தில் வழங்கியுள்ளோம். மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுத்துள்ளோம். விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்: மார்க்கெட்டிங் நிபுணர் பணிக்கு ஒரு காலியிடமும், பயிற்சி நிபுணர் பணிக்கு ஒரு காலியிடமும் உள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பயிற்சி நிபுணர் பணிக்கு M.S.W / M.Sc (Agri Extension)/ MBA (Agri வணிகம்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்து இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் நிபுணர் பணிக்கு எம்பிஏ (அக்ரி மார்க்கெட்டிங்) படித்து இருக்க வேண்டும்.

Just 12வது / டிப்ளமோ படிச்சிருந்தா கூட போதும்! தமிழ்நாடு அரசு வேலை பாக்க முடியும்!

சம்பளம்: ஒருங்கிணைக்கப்பட்ட தொகையாக மாதம் ரூ.40,000/- வழங்கப்படும். மற்ற கொடுப்பனவுகள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

பணியிடம்: சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய விருப்ப உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த TNIAMP வேலைக்கு தகுதியுடையவராக இருந்தால், உங்க இமெயில் ஐடிலேயே [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற விவரங்கள்:

வயது வரம்பு பற்றிய விவரங்கள் குறிப்பிடவில்லை. நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அப்ளிகேசன் பீஸ் எதுவும் குடுக்க தேவையில்லை. இன்னும் விவரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் TNIAMP Recruitment 2023 Official Notification லிங்கை பாருங்க!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top