ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வங்க தமிழகம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, முதற்கட்டமாக சென்னையில் 100 எலக்ரிக் பஸ்களை சோதிக்கும் முறையில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தமிழக அரசு டீசல், பெட்ரோல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்க அதிக அளவில் ஆர்வம் காடுகிறது. மேலும் , பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு மின்சார பேருந்து திட்டத்திற்கு 57, 613 கோடி ரூபாய் செலவிட முடிவுசெய்துள்ளது.
Also Read : பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! அனைத்து தலைமை ஆசிரியர்களும் உடனே இத பண்ணனுமாம்!!
மேலும், இந்த திட்டமானது 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மற்றும் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஆன்லைனில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் புதிய நவீன தொழில்நுட்பத்தோடு தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் வாங்க அமைச்சர் சிவசங்கர் தனது பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார்.