தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கோடை வெயில் முடிந்த பின் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துகுள்ளாகினர். அதன்பின், கடந்த சில வாரங்களுக்கு மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்தது. ஆனால், அப்பொழுது கூட வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது.
இந்நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இன்று(சனிக்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read : பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்!!
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் வருகிற 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.