ஆதார் கார்டில் மொபைல் நம்பர் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…

Tamil Nadu News Today Linking mobile number to Aadhaar card is now very easy

ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மிகவும் முக்கிய ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் அட்டையின் தேவையானது கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பது மிக முக்கியம்.

அந்த வகையில், ஆதார் கார்டுடன் பயன்பாட்டில் இருக்கும் மொபைல் எண்ணை இணைப்பது மிக அவசியம் ஏனென்றால் ஒவ்வொரு முறை ஆதார் கார்டை பயன்படுத்தும் போதும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். இந்த otp யை பயன்படுத்தி தான் பல்வேறு செயல்களையும் மேற்கொள்ள முடியும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் அவ்வபோது தங்களது மொபைல் எண்களை மாற்றி வருகின்றனர். அவ்வாறு மாற்றும் மொபைல் எண்களை ஆதார் கார்டில் எளிமையாக இணைப்பதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ALSO READ : Google Pay அதிகமா யூஸ் பண்றீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க… நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!!

  • முதலில் https://www.ippbonline.com என்கிற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதில், service request என்ற Option யை தேர்வு செய்யவும்.
  • அதன்பிறகு, Doorstep Banking என்ற பொத்தான் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
  • பின்னர், ஆதார்-மொபைல் அப்டேட் என்பதை கிளிக் செய்து, அதில் புதிய மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். பின்பு, உங்களது வீட்டிற்கே வந்து ஆதார் பயோமெட்ரிக்ஸ் பதிவு மற்றும் KYC செயல்முறையை நிறைவு செய்வார்கள்.
  • இந்த செயல்முறை நிறைவு செய்தபின், உங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிடும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top