செய்திகள்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு பதிவுத் துறையில் விரைவில் வேலைவாய்ப்பு செய்திகள்

Tamil Nadu Registration Department tnreginet

தமிழ்நாடு பதிவுத் துறையில் விரைவில் வேலைவாய்ப்பு 2020 செய்திகள் Tamil Nadu Registration Department NEWS 2020

Tamil Nadu Registration Department

தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு?

பட்டியல் அனுப்ப ஐஜி உத்தரவு

சென்னை , மார்ச் 4: தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை அனுப்ப அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு பதிவுத்துறை ஐஜி உத்தர விட்டுள்ளார். Tamil Nadu Registration Department Jobs Opening Shortly

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், 40 மாவட்ட பதிவாளர்கள் அலுவலகங்கள், 11டிஐஜி அலுவலகங்கள், 22 ஏஐஜி அலுவலகங்கள் உள்ளன. இதில் கூடுதல் டிஐஜி, ஏஐஜி, மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்கள். உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலுவலக பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை வாய்ப்பு 2020

இதுதொடர்பாக பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . உதவியாளர்கள் இல்லாமல் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அலுவலக பணியிடங்கள் காலிபணியிடம் விவரத்தை தெரிவிக்குமாறு பதிவுத்துறை தலைவர் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். All Over Tamil Nadu Registration Department Office Job Vacancies Details

இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அலுவலங்களில் பணிப்பளுவின்அடிப்படையில் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்பப்பட வேண்டியது தவிர்க்க இயலாத என கருதப்படும் அலுவலகங்களை பட்டியலிட்டு, அவ்வலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடம் நிரப்பப்பட வேண்டியது அவசியம் குறித்து தங்களது விரிவான அறிக்கையை உடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://tnreginet.gov.in/

 

(இது ஒரு செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி)

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/HiA8SwNMNgbHy7Pd44sDq5

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker