TNRD- தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணிக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி 8 வது படித்திருந்தாலே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை செய்யலாம். அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணிக்கு மாத சம்பளமாக ரூ. 15,700முதல் ரூ. 62,000 வரை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வயது வரம்பு குறைந்த பட்சம் வயது 18 முதல் அதிகபட்சம் வயது 37 வரை இருக்க வேண்டும்.

TNRD இந்த வேலைக்கு தகுதியான நபர்களை நவம்பர் 21,2023 முதல் டிசம்பர் 11,2023 வரை உங்களை ஆப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. விண்ணப்பிப்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை. எழுத்து தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜீப் டிரைவர் பணிக்கு LMV உரிமம் மற்றும் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.அலுவலக உதவியாளர் பணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பணியிடம் திருவாரூர் ஆகும்.
இப்பணிக்கு தேவையான விண்ணப்பப் படிவத்தை TNRD-ன் Official Notification பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அனுப்பவும். மேலும் தகவல்களை Official Website பெற்றுக்கொள்ளலாம்.