10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

Tamil Nadu School Education Department

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் (Tamil Nadu School Education Department), தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 10-ம், 11-ம், 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான நடப்பு கல்வி ஆண்டு (2019-2020) அரையாண்டுத் தோ்வு கால அட்டவணை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை (TNSchools)

Tamil Nadu School Education Department

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியா பள்ளிகளுக்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கால அட்டவணையினை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பத்தாம் வகுப்பிற்கான அரையாண்டுத் தேர்வு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையில் நடைபெறும். அதே போன்று 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான அரையாண்டுத் தோ்வு டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரையில் நடைபெறும்.

10-ஆம் வகுப்பு அரையாண்டுத் தோ்வு கால அட்டவணை

தோ்வு நேரம் (10:00 AM to 01:15 PM)

நாள்
13.12.2019 – வெள்ளி – – – – – மொழி பாடம்/Language
16.12.2019 – திங்கள் – – – – – ஆங்கிலம்/ English
17.12.2019 – செவ்வாய் – – – – விருப்ப மொழி/Optional language
18.12.2019 – புதன் – – – – – – – கணிதம்/ Mathematics
20.12.2019 – வெள்ளி – – – – – – அறிவியல்/Science
23.12.2019 – திங்கள் – – – – – – – சமூக அறிவியல்/Social Science

பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பின் படி 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும், 11ம் வகுப்பிற்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

சென்னை சேது சமுத்திரம் கார்ப்பரேஷன்-ல் வேலை

தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடங்கள் (15 Mins) வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தோ்வு எண் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்துள்ள மூன்று மணி நேரம் (3 Hours), வினாக்களுக்கு விடையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

http://tnschools.gov.in/media/documents/ads/halfyearly101112.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button