தமிழக மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க… தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

Tamil Nadu students will hit the jackpot Tamil Nadu Govt Action

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வருவாய் பின்பதன்கிய குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்றும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காகவும் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு திட்டம் என்னும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் பயனடைய முதலில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக தேசிய அளவில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் வருமானம் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் 7 ஆம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு – மத்தியக்குழு இன்று ஆய்வு

இதனையடுத்து, 2023-2024 கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வானது வருகிற பிப்பரவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் வருகிற ஜனவரி 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.50 தேர்வு கட்டணத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top