தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ஆயிரம் போலீஸ் வேலைக்கு 2.50 லட்சம் பேர் போட்டி..!

Tamil News 2.50 lakh people compete for 3000 vacant police jobs in Tamil Nadu

தமிழக போலீஸ் துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸ்த்துறைகளில் உள்ள 2 ஆம் நிலை காவலர், 2 ஆம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் சுமார் 3 ஆயிரத்து 359 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்து, இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட இந்த காலிப்பணியிடங்களுக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2 லட்சத்து 81 ஆயிரத்து 456 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இதில், வவிண்ணப்பித்தர்வர்களை தேர்வு செய்யும் விதமாக அவர்களுக்கு எழுத்து தேர்வும், தமிழ் தகுதி தேர்வும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

ALSO READ : மருத்துவமனையில் 23 நாட்கள் சிசிச்சை பின் வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வானது தமிழகம் முழுவதும் உள்ள 35 மாவட்டங்களில் 200 க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 10 மையங்களில் நேற்று தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்து தேர்வுக்கு 41 திருநங்கைகள் உள்பட சுமார் 2.50 லட்சம் பேர் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நடைபெற்ற 10 தேர்வு மையங்களிலும் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top