மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னை உள்பட 4 மாவட்ட கல்லூரிகளுக்கு வரும் 11 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!

Tamil News 4 district colleges including Chennai will be closed until the 11th Due to storm Mikjam

தமிலகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மிக்ஜம் புயலின் தாக்கம் சென்னையை அதிக அளவில் பாதித்துள்ளது. மிக்ஜம் புயல் வருவதை ஒட்டி சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் எச்ச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை, நேற்று காலை ஓய்ந்தது. இதனால் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீர் படிப்படியாக வற்றி வருகிறது. ஆனாலும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வற்றாமல் அப்படியே தேங்கியுள்ளது. மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ALSO READ : டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!

இதனையடுத்து, இந்த 4 மாவட்டங்களில் மழை ஓய்ந்தாலும் அங்குள்ள பல்வேறு தனியார் கலை கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கல்லூரிகளுக்கு வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுதிகளில் தங்கி படித்து வந்த மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top