தமிழ்நாட்டில் 552 புதிய பஸ்… போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Tamil News 552 new buses in Tamil Nadu Action taken by the transport department

சென்னை மாநக போக்குவரத்துத்துறையின் கீழ் மட்டும் கிட்டத்தட்ட 629 வழித்தடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அவ்வபோது பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு ஏற்றவாறு ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றப்பட்ட இந்த நடைமுறையை யாரும் கண்காணிப்பது இல்லை என்றும் மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைக்கும் இடம் படிக்கட்டை ஒட்டி அமைந்திருப்பதாலும், அவற்றிற்கு தடுப்பு ஏதும் இல்லாமல் இருப்பதால் பஸ் வேகமாக செல்லும் பட்சத்தில் ஊன்றுகோல் தவறி கீழே விழுந்துவிடும் என்பதாலும் பேருந்துகளில் தடுப்புகள் வைக்க வேண்டும் என்று பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ALSO READ : தமிழ்நாட்டில் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! அச்சத்தில் பொதுமக்கள்!!

இதுதொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் சிவர்சங்கர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழம் – 352, கோயம்புத்தூர்-100, மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top