சென்னையில் மிக்ஜம் புயலால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்..!

Tamil News A special camp for those who lost their certificates due to Mikjam storm in Chennai

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர். சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அத்தியாவசிய பொருட்கள் முதல் முக்கிய ஆவணங்கள் வரை அனைத்தும் சேதமடைந்து உள்ளது.

ALSO READ : பிரபல ஓடிடி தளத்தில் இன்று வெளியானது “ஜப்பான்” படம்..!

இந்நிலையில், மிக்ஜம் புயலால சேதமடைந்த சான்றிதழ்களை இழந்த மக்கள் அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள்’ இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில், புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு சான்றிதழ்களை பலரும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த சான்றிதழ்களை கட்டணமின்றி மீண்டும் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட 46 பகுதி அலுவலங்களிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top