இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை காண மும்பைக்கு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

இந்தியா-நியூசிலாந்து இடையே நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி சுற்று இன்று மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் அந்த போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மும்பை சென்று உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் ரஜினிகாந்த் அவர்களிடம் தான் போட்டியை காண செல்கிறேன் என்று கூறினார்.

13 – வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5- ஆம் தேதி தொடங்கியது. மேலும் இந்த தொடரில் உலகின் முன்னணியான 10 நாடுகள் பங்கேற்று உள்ளனர். அதோடு இந்திய அணி நடந்து முடித்த அனைத்து லீக் ஆட்டங்களிலும் வென்று 18 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணியை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

தற்போது தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்ற பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரைஇறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அணி நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியோடு மோத உள்ளது. அதோடு இதில் வெற்றி பெற்ற அணி அரை இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெறும்.

ALSO READ : காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்பு..! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!!

மேலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் பிரியர்கள் இடையே நிலவி வருகிறது. அதோடு கடந்த 22 – ஆம் தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்திசாயத்தில் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கிரிக்கெட் பிரியரான ரஜினிகாந்த்திற்கு இந்திய – நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டியை காண சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனே, ரஜினிக்கு பிசிசிஐ சார்பில் பாகிஸ்தான் போட்டியை காண சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரை இறுதி போட்டியை காண மும்பை சென்றார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்