
தமிழகத்தில் முன்னதாக சுற்றுலாத்துறை மற்றும் பொதுப்போக்குவரத்துறைக்காக பயன்படுத்த குறிப்பிட்ட சில வகை கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி வந்தது. ஆனால், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் அனைத்து வகையான கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையில், மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் அனைத்து வகையான கார்களையும் வாடகை கார்களாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ALSO READ : மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டணம் நிறுத்திவைப்பு..!
வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக போக்குவரத்துறை இது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு பயணிகளை கவரும் வகையில் பூக்கள், பழங்கள், காய்கறிகள் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்பொழுது சொகுசு வாகனங்கள் உட்பட அனைத்து வகையான கார்களையும் வாடகை வாகனங்களாக (மஞ்சள் நம்பர் பிளேட்) பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.