
பொதுவாக கார்த்திகை மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சாமியை தரிசிக்க செல்வார்கள். இதன் காரணமாக பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைக்காமல் சைவ உணவை சமைத்து வருகின்றனர். இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமலமல்லாமல், பருவமழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் போதுமானதாக இல்லாத காரணத்தினாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாகவும், கார்த்திகை மாத இறுதிக்குள் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ : தமிழகத்தில் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..!
அதன்படி, சந்தையில் ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 60 க்கும், நெல்லிக்கனி ஒரு கிலோ ரூ.102 க்கும், கத்தரிக்காய் ரூ.25 க்கும், முட்டைக்கோஸ் ரூ. 12 க்கும், குடைமிளகாய் ரூ. 30 க்கும், கேரட் ரூ.38க்கும், காலிஃப்ளவர் ரூ. 20 க்கும், சௌசௌ ரூ.20க்கும், தேங்காய் ரூ. 30 க்கும், மக்காச்சோளம் ரூ.80 க்கும், பீட்ரூட் ரூ. 35 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இஞ்சி கிலோவுக்கு ரூ. 250க்கும், பச்சை பட்டாணி ரூ. 150க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.35க்கும், பெரிய வெங்காயம் ரூ. 60க்கும், தக்காளி ரூ.38க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும், பீர்க்கங்காய் ரூ. 50க்கும், உருளைக்கிழங்கு ரூ.35க்கும், புடலங்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.