சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Tamil News Chief Minister M.K.Stalin personally inspected the effects of Mikjam storm in Chennai

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜம் புயலானது சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்ததால் சென்னையில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று காலை முதல் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அனைவரும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தற்பொழுது ஓய்ந்துள்ளது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மழை நீரை வெளியேற்றி வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ALSO READ : 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!

இந்நிலையில், புயல் காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளை இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, நிவாரண முகாமில் உள்ள மக்களுக்கு உணவழித்ததுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன்பின், சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top