தொடர் விடுமுறை : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்!

Tamil News Continuous holiday Traffic congestion due to people invading their hometowns

நாடு முழுவதும் நாளை மறுநாள்(டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் வார இறுதி நாட்களுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகமான பொதுமக்கள் காரில் பயணித்து வருகின்றனர். இதனால் விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் என்ற தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது.

ALSO READ : மாணவர்களே சீக்கிரம் தயாராகுங்கள்… அடுத்த மாதம் தென் இந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி..!

மேலும், இந்த மேம்பால கட்டும் பணியின் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகமாக கார்களில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்வதால் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. விழுப்புரம் நெடுஞ்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பால பணிகள் முடிவடைந்த ஒருபகுதியின் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படு

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top