மருத்துவமனையில் 23 நாட்கள் சிசிச்சை பின் வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

Tamil News DMD chief Vijayakanth returned home after 23 days of treatment in the hospital

தே.மு,தி.க கட்சியின் தலைவரான அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..! இன்றைய நிலவரம்…

மத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் உடலநிலை குறித்து கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு நெஞ்சு சளி அதிகாமாக இருப்பவதால் அவரால் இயற்கையாக சுவாசிக்க முடியாமல் செயற்கையாக சுவாசித்து வருவதாக தெரிவித்தனர். இதனால் சமூக வலைதளங்களில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகியது. இது தொடர்பாக விஜயகாந்தின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் உடல்நலம் நன்றாக இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top