மீண்டும் மருத்துமனையில் அனுமதிக்கபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

Tamil News DMD leader Vijayakanth admitted to the hospital again

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த் அவர்கள். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் திரைத்துறையை விட்டு விலகிய விஜயகாந்த் அரசியலில் களம் இறங்கினார். விஜயகாந்த் தற்பொழுது தே.மு.தி.க கட்சியின் தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த ஒரு சில வருடங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மக்களுக்காக சேவை செய்து வந்த விஜயகாந்த் கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவால் அவ்வபோது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி, கடந்த மூன்று வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12ஆம் தேதி வீடு திரும்பினார். அதன்பின், தேமுதிக கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்று தொண்டர்களை சந்தித்தார்.

ALSO READ : பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு..! என்ன காரணம்?

இந்நிலையில், தற்பொழுது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரது தொண்டர்கள் தலைவருக்கு என்ன ஆச்சி? ஏன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top