வருகிற 31 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tamil News Fees waived at toll booths till 31st District Collector Notification

வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிகஜ்ம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் சூழ்ந்து சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் வெள்ளம் வடிந்த நிலையில், பல பகுதிகளில் 5 நாட்கள் கடந்தும் வெள்ள நீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் தமிழக தென்மாவடங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் தங்கள் அனைத்து விதமான உடைமைகளையும் இழந்து வீட்டை விட்டு வெளியேறி சென்றனர்.

ALSO READ : TNPSC தேர்வர்களே… குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!

இதனையடுத்து, வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதற்காக தென் மாவட்டங்களை நோக்கி அதிக அளவிலான வாகனங்கள் செல்கிறது. வெள்ள நிவாரண பொருட்களை வழங்க வரும் வாகனங்களுக்கு சுங்க சாவடி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் டிசம்பர் 31ஆம் தேதி வரை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றுதான் அறிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top