தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..! இன்றைய நிலவரம்…

Tamil News In Live Gold price today fell by Rs.120 per quintal

தங்கம் என்றால் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகவும் குறைவுதான். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தங்கம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு சிலர் தங்கத்தினை எதிர்கால சேமிப்பிற்காக வாங்கி வருகின்றனர். தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ : எக்ஸாம் இல்லை! விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை! தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை!

தங்கத்தின் விலையானது கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உயர்ந்து கொண்டே வந்து தற்பொழுது உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சில மதங்களாகவே தங்கம் விலையானது ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று(டிசம்பர் 11) தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை :

சென்னையில் 22 கேரட் ஆபரனதங்கத்தின் விலையானது இன்று(திங்கட்கிழமை) கிராம் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 750 க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top