
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO READ : உலகக்கோப்பை இறுதி போட்டியை காண சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு..!
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களான புதுகோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை(திங்கட்கிழமை) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.