சென்னையில் பால் தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்..!

Tamil News In Live Minister Mano Thangaraj put an end to milk shortage in Chennai

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இரண்டு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வரும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் மழை ஓய்ந்தாலும், தேங்கிய மழைநீர் வடியாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்த வந்த மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே ஆவின் பால் இலவசமாக வழங்கபட்டு வந்தது. இதனையடுத்து, நேற்று மாலை முதல் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ : பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு..! தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்க மக்கள் முன்டியடிப்பதாகவும், மக்களின் இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி பல்வேறு தனியார் நிறுவனங்கள் பாலின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக இன்று(வியாழக்கிழமை) காலை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, மக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் பால் விலை உயர்த்தி வழங்குவது உறுதி செய்யப்பட்டால் அந்த கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top