அரசு ஊழியர்களின் ஓய்வுதிய வயது 60 லிருந்து 62 ஆக உயர்வு – ஈரான் அரசு அறிவிப்பு

Tamil News In Live Retirement Age of Civil Servants Raised from 60 to 62 Iran Government Announcement

பொதுவாக அனைத்து நாடுகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது ஈரான் நாட்டு அரசு ஓய்வூதிய வயதை உயர்த்தி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரான் நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக் இருந்து நிலையில், தற்பொழுது 62 ஆக் உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரித்துள்ளது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பெரும்பாலானோருக்கு இது வேதனையை கொடுத்துள்ளது. ஏனென்றால், ஊழியர்களின் பதவிக்காலம் அடுத்த 2 ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில் புதிதாக வேலைவாய்ப்பிற்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு 2 ஆண்டுகளுக்கு இல்லாமல் போய்விடும் சூழல் உருவாகியுள்ளது.

ALSO READ : வாட்ஸ் அப்பில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்..! புதிய அப்டேட்டால் பயனாளர்கள் மகிழ்ச்சி!!

மேலும், ஆண் அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் பதவியில் இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது 35 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஈரான் அரசுஅறிவித்த இந்த அறிவிப்பு ஆண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். பெண் ஊளியர்களுக்கு எப்பொழுதும் போல் ஓய்வுதிய வயது 52 ஆகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top