தியேட்டர்களில் உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை இன்று முதல் அமல்..!

tamil News Increased ticket prices in theaters will be effective from today

கொரோனா காலக்கட்டத்தின்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக கடைகள் அடைப்பு, தியேட்டர்கள் அடைப்பு என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பலரும் வேலை இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த வரிசையில், புதுச்சேரியில் தியேட்டர் வைத்திருந்த உரிமையாளர்களும் அதில் பணிபுரிந்து வந்த ஊழியர்களும் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

அதன்பின்பு, கொரோனா சற்று குறைய தொடங்கியது. இதனால் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. இந்த சூழ்நிலையில், வேறு வழியின்றி தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டின் விலை 100 ரூபாயிலிருந்து 75 ஆக குறைக்கப்பட்டது.

ALSO READ : தமிழகத்தில் 20 மாநகராட்சியில் காலியாக இருக்கும் 2,534 பணியிடங்கள்..! எழுத்துத்தேர்வு மூலம் நிரப்ப முடிவு!!

இந்நிலையில், தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், புதுச்சேரி தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று புதுவை அரசுக்குகோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் புதுவை அரசும் இதற்கு அனுமதி வழங்கியது. அதன்படி, 3 ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயிலிருந்து இருந்து 60 ஆகவும் பால்கனி கட்டணம் 150 லிருந்து 170 ஆகவும் 2 ஆம் வகுப்பு கட்டணம் 75 லிருந்து 100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட இந்த கட்டண முறையானது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்