பொதுமக்களுக்கு புதிய எச்சரிக்கை! தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கிய ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ்..!

Tamil News JN1 type of corona virus that started spreading rapidly in Tamil Nadu

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் என்னும் நகரில் “கொரோனா” என்னும் கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸானது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் லட்சகணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன்பின், கொரோனா வைரஸ் உருமாறி தீவிரமடைய தொடங்கியது. பல்வேறு போராட்டங்களுக்கு பின், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்பொழுது இந்தியாவில் மீண்டும் பரவத் தொடங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக உருமாற்றமடைந்த ஜேஎன் 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் அதிக விளைவை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதாரம் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி வரும் இந்த சூழ்நிலையில், அனைத்து மருத்துவமனைகளும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பு வைத்திருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ : மார்கழி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 20 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்!

இந்நிலையில், கோவா மாநிலத்தில் மட்டும் 34 பேரிடம் புதியவகை கொரோனா கண்டறியப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜே.என்.1 புதியவகை கொரோனாவை விஞ்ஞானிகள் உன்னிப்பாக ஆய்வு செய்து வருவதாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top