மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை..! சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

Tamil News Live Hospitalized Vijayakanth condition is not stable a statement issued by the hospital

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த விஜயகாந்த் தற்பொழுது தே.மு.தி.க கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், உடல்நிலை சீராக இருந்ததால் அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், நெஞ்சு சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் கடந்த 18 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 நாட்களாகவே மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த அவர் விரைவில் வீடு திருப்புவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ALSO READ : நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை : பரிசு தொகுப்பில் ரூ.2000 வழங்க அரசு ஆலோசனை!

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே சீராக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாகவே அவரது உடல்நிலை சீராக இல்லை என்று தெரிவித்துள்ளது. அவர் மூச்சி விட சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜயகாந்த் அவர்களுக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top