
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலானது அதன் கொழுப்பு சத்திற்கு ஏற்றாற்போல் பச்சை, ஆரஞ்சு என பல்வேறு கலர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. இதனால் மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திகுறிப்பில், ஆவின் பால் விலை உயர்ந்துள்ளதாக செய்தி வெளியானது உண்மைதான் என்று தெரிவித்தார். ஆனால், உயர்த்தப்பட்ட பாலின் விலையானது ஆவினில் விற்பனை செய்யப்படும் அனைத்து பால் பாக்கெட்டுக்களுக்கும் பொருந்தாது என்றும் தெரிவித்தார்.
ALSO READ : வேலூர் கோட்டையில் நடைபெறும் விஷால் படத்தின் படப்பிடிப்பு..!
ஆவினில் விற்பனை செய்யப்படும் 200 மி.லிட்டர் பால் பாக்கெட்டின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆவின் டிலைட் 500 மி.லிட்டர் பாக்கெட்டுகள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் பால் உள்ளிட்டவை எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இதுவரை ஆவினில் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட பாலானது இனி ஊதா(Violet) நிற பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்படும் என்றும் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.