தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை..! இன்றைய நிலவரம் இதோ…

Tamil News Live No change in gold price today Here is todays status

தமிழக பண்பாட்டின் படி, குழந்தைகள் பிறப்பு முதல் அவர்களின் கல்யாண நிகழ்வு வரை என அனைத்து விதாமான நிகழ்ச்சிக்கும் தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தங்கத்தை சேர்க்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு தங்கம் தமிழகர்களின் பண்பாட்டில் ஒரு அங்கமாக உள்ளது. மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் மேல் இருக்கும் ஆசை அதிகரித்து கொண்டே செல்வது போல தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

ALSO READ : TNPSC தேர்வர்களே… முக்கிய அறிவிப்பு வெளியீடு..! உடனே பாருங்க!

அந்த வகையில், கடந்த அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலையானது ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வந்தது. தங்கம் விலை உயரும் போது 100 முதல் 200 ரூபாய் வரை உயருகிறது. அதுவே குறையும் போது 10 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே குறைகிறது. தங்கத்தின் விலையானது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அடிப்படையில் தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) எந்தவொரு மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 780 க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ.46 ஆயிரத்து 240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை போன்று வெள்ளியின் விலையும் எந்தவொரு மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top