மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுபாடு!

Tamil News Live Petrol and diesel sales affected due to heavy rains in Chennai

சென்னையில் நேற்று மிக்ஜம் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு மின்விநியோகமும் நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.

மேலும், கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருளில் மழைநீர் கலந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் போன்றவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

ALSO READ : தொடர் மழை எதிரொலி : 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு!

இது தொடர்பாக பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் சார்பில் கூறுகையில், கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசலில் மழை நீர் கலந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, உரிய முறையில் அதனை பரிசோதனை செய்தபின்பே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தனர். பெட்ரோல் நிலையங்களில் உள்ள பெட்ரோல், டீசலை பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்படுவதால் அதனை விநியோகிப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top