திருவண்ணாமலையில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்..! அவசர உதவி எண்களை அறிவித்த காவல்த்துறை!!

Tamil News Live Pilgrims flocking to Thiruvannamalai Police announced emergency numbers

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளான்றும் ஏராளமான பக்தர்கள் நடந்தே கிரிவலம் சென்று சாமியை தரிசித்து வருவார்கள். அதிலும் குறிப்பாக கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த கார்த்திகை தீபத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணமலையில் கடந்த 17 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருநாளின் முக்கிய நாளான இன்று அதிகாலை 3.40 மணியளவில் திருவண்ணாமலை கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த சிறப்புமிக்க பரணி தீபத்தை காண நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

ALSO READ : கார்த்திகை தீபத்திருவிழா : மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு!

இந்நிலையில், கோவிலின் பின்புறம் உள்ள மழையின் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மாக தீபம் ஏற்றப்படும் காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷிப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசர உதவியை பெற தொலைபேசி எண்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top