மக்களே உஷார்! தீவிரமடையும் மிக்ஜம் புயல்… துறைமுகங்களில் 5 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Tamil News Live Storm Mijam intensifies No. 5 warning cage raised in ports

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்பொழுது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மிக்ஜம் போல் சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்றும் இன்று(திங்கட்கிழமை) மாலை மழையின் தீவிரம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ : வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

இதனையடுத்து, வங்கக்கடலில் உருவான “மிக்ஜம்” புயலானது தீவிர புயலாக வலுபெற்று இன்று மாலை நெல்லூர்- மசூலிப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால் இன்று இரவு பல பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்பதால் புதுச்சேரி துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top