மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை..!

Tamil News Live Today the cylinder price has Too increased

இந்தியாவை பொறுத்தவரை ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 வீட்டு உபயோக சிலிண்டரை மானிய விலையில் பெற்று கொள்ளலாம் என்றும் அதன்பிறகு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படாது எனவும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், ஹோட்டல், சிறு கடைகள் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கும் எந்தவொரு மானியமும் இன்றி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்பனை செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ALSO READ : இனிமே கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்தால் கட்டணமா? சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றனர். அதன்படி, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், இன்று(டிசம்பர் 1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1,942 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) ரூ.26.50 உயர்த்தப்பட்டு ரூ.1968.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சிறு, குறு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் மிகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். வணிக சிலிண்டரின் விலை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்றும் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top