உத்தரகாண்ட் சுரங்க விபத்து : மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய ராணுவ வீரர்கள்!

Tamil News Live Uttarakhand Mine Accident Indian Army Soldiers Engaged in Rescue Mission

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி என்னும் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆம் தேதி அதிகாலை திடீரென சுரங்கப்பாதையில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 14 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவர்களை மீட்க சுரங்கத்தின் மேல் பகுதிகளில் இருந்து துளையிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளில் கூறுகையில், சுரங்க விபத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள் விரைவில் மீட்கக்கப்படுவார்கள் என்றும் மீட்கும் பணியானது இரவு பகல் பாராமல் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், துளையிடும் அமெரிக்க இயந்திரம் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் மாற்று வழி குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல்!

சுரங்கப் பாதையில் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க இன்னும் 10 அல்லது 12 மீட்டர் தூரம் மட்டுமே துளையிட வேண்டியுள்ளது. அதற்குள் இயந்திரம் இடிபாடுகளில் சிக்கி கொடுள்ளதால் மீதி இருக்கும் பணியினை ஆட்கள் மூலம் மேற்கொள்ளலமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆட்கள் மூலம் பணியை தொடங்கும் போது அதிக நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால், மீட்பு பணியை விரைந்து முடிக்க இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. இயந்திரம் இல்லாமல் மனிதசக்தி மூலமாக மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர்.இந்திய ராணுவத்தின் என்ஜினியர் குழுவான மெட்ராஸ் சப்பேர்ஸ் என்ற பிரிவில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் நிகழ்விடத்திற்கு வந்து பணியை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top