சென்னை மெட்ரோவில் நாளை ஒரு நாள் சிறப்பு சலுகை..! ரூ.5 மட்டும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்!!

Tamil News Live You can travel in Chennai Metro tomorrow only for one day by paying Rs.5

இன்றைய அவசர காலக்கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்தவொரு இடத்திற்கும் போக முடியாத சூழல் நிலவி வந்தது. அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் அதிகமாக காணப்படும். மக்களின் இத்தகைய சிரமத்தை குறைக்க சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதிலிருந்தே பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடுகையில், சுமார் 80 ம்=லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயனித்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி 3 லட்சத்து 35 ஆயிரத்து 677 பேர் பயணம் செய்துள்ளனர்.

ALSO READ : ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு..!

இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க செய்ய மெட்ரோ நிர்வாகம் பல்வேறு கட்டண தள்ளுபடியை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட் போன்ற பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிறுவன தினம் நாளை(டிசம்பர் 3) கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் கியூ ஆர் குறியீடு முறையை பயன்படுத்தி பயணசீட்டு பெறுபவர்கள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top