மார்கழி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 20 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்!

Tamil News Margazhi Pournami 20 AC to Thiruvannamalai Krivalam. Buses running

திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் இலட்சணக்கான மக்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபடுவார்கள். இதில் பலரும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக கிரிவலம் செல்வார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாத பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் இந்த மார்கழி பவுர்ணமிக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதன்படி, இன்று(செவ்வாய்க்கிழமை) மார்கழி மாத பவுர்ணமி என்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.

ALSO READ : 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் : கடலோர பகுதிகளில் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலம் 20 அதிநவீன இருக்கை, படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் கீழ் இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலுக்கு 9445014452, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top