அனைத்து ரேஷன் கடைகளிலும் வரப்போகும் புதிய மாற்றம்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

Tamil News New change coming in all ration shops New information just released

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பொதுவிநியோகம் என்னும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த பொதுவிநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீப காலமாகவே ரேஷன் கடைகளில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்க ரேஷன் பொருட்களை வாங்க வரும் மக்களிடம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி அதன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பலரும் இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ALSO READ : உலகம் முழுவதும் இன்று பிரபல “எக்ஸ்” தளம் திடீர் முடக்கம்..!

மக்களின் இந்த கோரிக்கை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடையிலும் கருவிழி சரிபார்ப்பு முறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த நடைமுறை விரைவில் செயப்படுத்தப்பட உள்ளதாகவும் ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில தினங்களில் துவக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய PoS ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுத்தவுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top