
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுப்போன்ற குளறுபடிகளை தடுக்கும் விதமாக விரல்ரேகை பதிவு முறை கொண்டுவரப்பட்டது. இந்த விரல்ரேகை பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திடம் கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கியது. இந்த பணியானது 2021 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த விரல்ரேகை பதிவின் போது பலருக்கும் விரல்ரேகை சரிவர பதியாமல் போய்விடுகிறது. இதனால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ALSO READ : லியோ திரைப்படத்தின் 25 வது நாள் சாதனை போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!
இதையடுத்து, தற்பொழுது ரேஷன் கடைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கருவிழி சரிபார்ப்பு முறை அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கருவிழி சரிபார்ப்பு இயந்திரத்தை தயாரிக்கும் பணியும் அதே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் முதல் ருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த பண்டியானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.