
பொதுவாக கார்த்திகை மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கார்த்திகை 1 முதல் 60 நாட்களுக்கு திறக்கப்படும் என்பதால் தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ALSO READ : அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் விலை..! ஷாக்கில் பொதுமக்கள்!!
பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1 ஆம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். அதன்பிறகு இருமுடி கட்டி மலையேறி ஐயப்பனை தரிசனம் செய்து வருவார்கள். இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு 41 நாட்கள் விரதமும் மகரவிளக்கு பூஜை தரிசனத்துக்கு 60 நாட்கள் விரதத்தையும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.
இந்நிலையில், இன்று கார்த்திகை மாதத்தின் முதல் நாள் என்பதால் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அனைவரும் துளசி மாலை அணிந்து விரதத்தை தொங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் சென்னை மகாலிங்கபுரம் கோவிலுக்கு சென்றும், கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்தும் விரதத்தை தொடங்கினர்.