மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு அமல்படுத்த வாய்ப்பு..! சற்றுமுன் கிடைத்த சுவாரஸ்ய தகவல்!!

Tamil News Opportunity to implement new pay commission for central government employees

நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கபப்டும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும்.

அந்த வகையில், தற்பொழுது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு இரண்டும் வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

ALSO READ : ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

மத்திய அரசு ஊழியர்கள் தற்பொழுது வரை 7 வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மட்டுமே சம்பளம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், விரைவில் புதிய ஊதியக் குழு அமல்படுத்த உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. இந்த புதிய ஊதியக் குழுவானது வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3.68 மடங்கு ஃபிட்மென்ட் காரணி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 44.44% உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆயிரத்திலிருந்து ரூ.26,000 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்